குடிவரவு திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது

விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுப்பு

கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் குடிவரவு, திணைக்களத்தின் அதிகாரியான பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் (22) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்  டிரான் அலஸ் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரிசையில் காத்திருக்காமல் நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக கடவுச்சீட்டை பெற்றுத்தருவதாக சந்தேகநபர்கள் தலா 20,000 ரூபாவை வசூலித்தமை வெளிக்கொணரப்பட்டிருந்தது.

இவர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தங்களை தரகர்கள் போல் காண்பித்து இவ்வாறு பணம் பறித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...