கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருவிழா

ஜூன் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

அன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்புத் திருப்பலியைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜூன் மூன்றாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை தினமும் மாலை 6.00 மணிக்கு நவநாட்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெற வுள்ளன.

12ஆம் திகதி மாலை ஏழு மணிக்கு வெஸ்பர்ஸ் ஆராதனை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற வுள்ளது.

13ஆம் திகதி காலை திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக துணை ஆயர் பேரருட்திரு என்டன் ரஞ்சித் ஆண்டகையின்தலைமையில்ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மாலை 5:30 மணிக்கு கோடி அற்புதரான புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனி இடம்பெற்று இரவு 8.00 மணியளவில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இறுதி ஆசீர்வாதம் வழங்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவுபெறள்ளது.


Add new comment

Or log in with...