Wednesday, May 17, 2023 - 11:34am
இலங்கையின் புகழ் பெற்ற பாடகர் டோனி ஹசன் காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு 73 வயதாகும்.
டோனி ஹசன் ஒரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதோடு, ஹிந்திப் பாடல்களைப் பாடும் ஆற்றல் காரணமாக அவர் இலங்கையர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தார்.
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது இறுதிக் கிரியைகள் இன்று (17) பி.ப. 5.00 மணியளவில் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும் என அவரது குடும்பத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Add new comment