ஓர் அரங்கும் மூன்று நிகழ்வும்

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் சமகாலத்தில் தலைநகர் தமிழ் கலைத்துறையை விட்டு மறைந்த பிரபல நடிகை பிரியா ஜெயந்தி, நடிகர் சந்திரசேகரன் மற்றும் இசையமைப்பாளர் எம். எஸ். செல்வராஜ் ஆகியோரை நினைவு கூரும் நிகழ்வும் எவோட்ஸ்-2023 கலை கலாசார போட்டித் தொடரில் கவிதை, சிறுகதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் மற்றும் நேரடி நிகழ்வாக அறிவிப்பாளர் போட்டியும் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 21.05.2023 ஞாயிறன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு-13 கதிரேசன் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்விற்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகரும் புரவலர் புத்தகப் பூங்கா நிறுவுனருமான புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்கிறார். 

சிறப்பு அதிதிகளாக ஜனாப் அஸ்லம் தெளபிக், ஜே.பி. ஜெயராம், ஆர். வைத்திமாநிதி, ஆர். விஜயகுமார், அஷ்ரப் அஸிஸ், ஜோசப் பெனாண்டோ உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


Add new comment

Or log in with...