அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு தொடர்ந்தும் நடைமுறையில்

பண்டிகை காலத்தையிட்டு அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரையில் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

நேற்றையதினம் (24) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடுகள், எரிபொருள் சரக்கு இறக்குமதித் திட்டம், எரிபொருள் விநியோகம், தேசிய எரிபொருள் அட்டை QR தொகுதி பற்றி இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் இறக்குமதி, முகாமைத்துவம், விநியோகம், விற்பனை தரவுகளை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்து பேண இதன்போது முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 05ஆம் திகதி முதல் வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...