பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸின் வீட்டிலும் 60 பவுண் தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என அவருடைய மனைவி தர்ஷனா பாலா சென்னை அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலாவுடன் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த ஜேசுதாஸ் மருமகள் அபிராமபுரம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது புகாரில் வீட்டில் இருந்த 60 பவுண் நகைகளைக் காணவில்லை. வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் இருக்கிறது என அவர் புகார் அளித்துள்ளார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் தங்கம், வைரம் திருட்டை போன்று ஜேசுதாஸ் மகன் வீட்டிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Add new comment