Saturday, April 1, 2023 - 6:00am
பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருட்களின் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன.
எவ்வாறாயினும் பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டுடன், விநியோகச் செயல்முறை வழமைக்குத் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் வழமையான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Add new comment