அல் குர்ஆனின் மாதம்

அல் குர்ஆன் மாற்றத்திற்கான வேதம். நெறிப்படுத்தலுக்கான அருள்மறை. அந்த மாற்றம் நிகழ வேண்டுமாயின் அதன் வசனங்களால் அதனை ஓதுபவர், படிப்பவர் மாற்றம் காண வேண்டும். அவரது உள்ளம் ஈடுபாடுகாட்டி அசைந்து கொடுக்க வேண்டும். இம்மாற்றத்தை அடைய குறிப்பிட்ட வசனம் குறித்து அது பேசவரும் விடயதானத்துடனான ஈடுபாடு மாத்திரமே அங்கு தேவைப்படும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களது சபையில் இருந்த நாட்டுப்புற அறபியொருவருக்கு நேர்ந்த ஒரு விடயம் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. 'யார் ஒரு கடுகளவு நன்மை செய்கிறாரோ அவர் அதனைக்கண்டு கொள்வார். யார் ஒரு கடுகளவு தீமையைச் செய்கிறாரோ அவர் அதனைக் கண்டுகொள்வார்' (சூரா - ஸல்ஸலா- 7,8) என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதுவதைக் கேட்டுக்கொண்டிருந்த குறித்த நாட்டுப்புற அறபி ஒரு கடுகளவா.. எனக்கேட்டார் 'ஆம்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்த நாட்டுப்புற அறபி, 'எனக்கு நேர்ந்த கைசேதமே...' என்று கூறிவாறு அங்கிருந்து எழுந்துசென்றார்.

அதனைப்பார்த்த நபி(ஸல்) அவர்கள், 'நாட்டுப்புற அறபியின் உள்ளத்திற்குள் ஈமான் நுழைந்துவிட்டது' என்று குறிப்பிட்டார்.

அல் குர்ஆனுடன் நாளாந்தம் ஈடுபாடு காட்டி தொடர்ச்சியாக அதனை பலமுறை அணுகுவதோடு அதன் விளக்கத்துடன் அதனை விளங்க ஆரம்பிக்க வேண்டும். எமது செவிகளுக்கு கேட்குமளவுக்கு மிதமான ஓசையுடன் முறையாக எமக்கு விளங்குமளவுக்கு ஓதவேண்டும். எம்மில் மாற்றம் செலுத்தும் இடங்களைத் தேடிய வண்ணம் அமைதியாக ஓதவேண்டும். அதனை ஓதுவதன் மூலம் அதிலிருந்து உள உணர்வு பெறுவதற்கான நோக்கம் எமக்கு இருக்க வேண்டும். சுருக்கமாகவேனும் ஒரு வசனத்தை விளங்கி அதிலிருந்து மாற்றம் பெறுவதன் மூலம் ஈமானை அதிகரித்துக்கொள்வது சிறந்ததாகும். எமக்கு விளங்க சிக்கலானவற்றை விட்டு மற்ற வசனங்களின் விளக்கங்களை நாம் பெற்றுக்கொண்டு நகர்வது சிறந்தது.

எமக்கு விளங்கக் கடினமாக உள்ள வசனங்களை புரிந்துகொள்ள தப்ஸீர் நூல்களை அணுகலாம். அ'ல்லாஹ் தனக்கு உதவுபவர்களுக்கு உதவுவான். அல்லாஹ் பலமானவனாகவும் கண்ணியமானவனாகவும் உள்ளான்'. (சூரா- ஹஜ்- 40). யார் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கான பாதையை அல் குர்ஆன் காண்பிக்கிறது. யார் எனது வழிகாட்டல்களை பின்பற்றுகிறார்கள் அவர் நஷ்டமடையவே மாட்டார். யார் எனது நினைவூட்டலை (அல் குர்ஆன்) புறப்பணிக்கிறாரோ அவரது வாழ்வு நெருக்கடியானதாக இருக்கும்'. (சூரா - தாஹா - 124) 'நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுக்கும் கர்மத்தைச் செய்தால் தீய தண்டணையை சுகிப்பீர்கள். (சூரா- அன் நஹ்ல் - 94) 'அவை (தண்டனைகள்) உங்கள் கரங்களால் நீங்கள் தேடிக்கொள்பவை. அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன். (சூரா - அன்பால் - 51)

மனிதர்களே... உங்கள் ரப்பிடமிருந்து ஒரு உபதேசம் வந்துள்ளது. அது நெஞ்சங்களில் இருப்பவற்றுகான நிவாரணியாகும். அது மூஃமீன்களுக்கான நேர்வழிகாட்டும் அருளாகும். (சூரா - புஸ்ஸிலாத் - 44)

ஒரு சமூகம் தானாக தனது மனநிலையை மாற்றாத வரை அல்லாஹ் அவர்களை மாற்ற மாட்டான் என்ற அல்குர்ஆனின் வசனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தனது சரியான நிலையை அடைந்துகொள்ள முயல்வது இன்றியமையாததாகும்.

கலாநிதி மஜித் ஹிலாலி...


Add new comment

Or log in with...