சூச்சியின் கட்சி கலைப்பு

மியன்மாரின் தேர்தல் ஆணையம் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியின் ஜனநாயக தேசிய லீக் கட்சியைக் கலைத்துள்ளது.

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு அந்தக் கட்சி மறுபதிவு செய்யத் தவறியதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன. அந்தக் கட்சியோடு மேலும் 39 கட்சிகளும் கலைக்கப்பட்டன.

தனது உறுப்பினர்கள் பலரும் சிறையில் இருப்பதால் தேர்தல் அதிகாரிகளுடன் பதிவு செய்யப்போவதில்லை என்று ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னதாகக் கூறியிருந்தது.

2015, 2020ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் ஜனநாயக தேசிய லீக் கட்சி மாபெரும் வெற்றிகளைக் கண்டது.

2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் கட்சியின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


Add new comment

Or log in with...