மாற்று மத சகோதரர்களையும் உள்ளடக்கிய சமூக, சமய நல்லிணக்க இப்தார் நிகழ்வு ஏப்ரல் 02 இல், சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் சிவில் சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள இந்த இப்தார் நிகழ்வில் மாற்று மத நண்பர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரமழானின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளில் சுதந்திரமாக இணைய சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த இப்தார் வைபவத்துக்கு உதவிய பொது நிர்வாக அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபை உட்பட பல பொது அமைப்புக்கள் மற்றும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அதிகாரிகள் மற்றும் தளபாடங்கள், நிகழ்வு ஒருங்கிணைப்புகளை ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்தவர்களுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏனைய சமூகத்தினரும் பிற மதங்களின் மாண்புகளைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Add new comment