தாய்வானில் சீன ஊடுருவல் உச்சம்

தாய்வானைச் சூழ சீன இராணுவ விமானங்களதும் கடற்படை கப்பல்களதும் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் மாத்திரம் 292 இராணுவ விமானங்களதும் 76 கடற்படைக் கப்பல்களதும் பிரசன்னம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“தாய்வானைச் சூழ சீன விமானங்களதும் கடற்படைக் கப்பல்களதும் பிரசன்னங்களை அண்மைக் காலமாக அடிக்கடி அவதானிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கூட 28 இராணுவ விமானங்களையும் 4 கடற்படை கப்பல்களையும் அவதானிக்க முடிந்தது. சில விமானங்கள் தாய்வான் வான் பரப்புக்குள்ளும் பிரவேசித்திருந்தன” என்றும் அது கூறியது.


Add new comment

Or log in with...