அருந்ததி இல்லம் முதலிடம்

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லுௗரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் அருந்ததி இல்லம் முதலிடத்தை வென்றது.

கல்லூரி அதிபர் எம். பத்மநாபன் தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார், சிறப்பு அதிதியாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவியுமான எஸ். சக்கரவர்த்தி ஆகியோர கலந்துகொண்டனர்.

இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன், முதலாம் இடத்தை அருந்ததி இல்லமும், இரண்டாம் இடத்தை நளாயினி இல்லமும், மூன்றாம் இடத்தை சாரதா இல்லமும் பெற்றுக் கொண்டன.


Add new comment

Or log in with...