இலங்கையின் 17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரான ஜோசப் மைக்கல் பெரேரா இன்று (28) காலமானார்.

1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி பிறந்த ஜோசப் மைக்கல் பெரேரா மரணிக்கும் போது, 81 வயதாகும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த 2001 டிசம்பர் 19 - 2004 பெப்ரவரி 07 காலப் பகுதியில் அவர் சபாநாயகராக பதவி வகித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா, தனது அரசியல் பயணத்தில் 1989 முதல் 2015 வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், உள்நாட்டு அமைச்சர், தொழில் அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஜனவரி முதல் 2015 ஓகஸ்ட் மாதம் வரை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 1964-1967 ஜா-எல நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1967-1970 ஜா-எல நகர சபையின் உப தலைவராக நியமனம்
  • 1970-1971 ஜா-எல நகர சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 1971-1976 எதிர்க்கட்சியின் பிரதம கொறடா (முதற்கோலாசானாக) பணியாற்றியிருந்தார். (UNP)
  • 1976-1977 முதலாவது தேசிய அரச பேரவை (பாராளுமன்ற) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1977-1978 இரண்டாவது தேசிய அரச பேரவை (பாராளுமன்ற) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1978-1988 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

Add new comment

Or log in with...