வட, கிழக்கில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசின் திட்டமில்லை

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் பிரதமர்

தமிழர் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டமில்லையென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அமைச்சு அதிக கவனம் செலுத்துமெனவும் அவர் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...