இலங்கையின் மிகவும் விருது பெற்ற பெருந்தோட்ட நிறுவனமான Hayley's பெருந்தோட்ட நிறுவனம், அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங்கை நுவரெலியாவில் உள்ள பேட்ரோ தேயிலைத் தோட்டத்திற்கு பிரத்தியேகமான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைத்திருந்தது.
இந்த விஜயம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் (Twitter) கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்: “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பிராந்தியத்தின் வெற்றிக்கு தேயிலை கைத்தொழில் முக்கிய பங்காற்றுகிறது. பொருளாதார நெருக்கடியின் சவால்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது பற்றிய எதிர்கால தொலைநோக்கு பார்வையை ஆராய்வதற்காக ஹேய்லிஸ் பெருந்தோட்டத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிராந்திய முகாமையாளரை நான் சந்தித்தேன்.”
Tea production is key to Sri Lanka’s economy and the region’s success. I met w the Managing Director & Regional Manager of Hayleys Plantation to explore a business owner’s perspective on challenges from the economic crisis and how to meet the needs of plantation workers. pic.twitter.com/bi9I0Y8UpJ
— Ambassador Julie Chung (@USAmbSL) February 8, 2023
அவரது வருகையின் போது, Haleys பெருந்தோட்ட நிர்வாகப் பணிப்பாளர், Dr. Roshan Rajadurai மற்றும் அவரது குழுவினர், Haleys பெருந்தோட்டத்ததில் எவ்வாறு ஒவ்வொரு அறுவடை இயந்திரத்தின் உற்பத்தியையும் துல்லியமாகப் பதிவுசெய்யும் தனிப்பயனாக்கப்பட்ட NFC அட்டைகளுடன் இணைக்கப்பட்ட மின்னணு எடைத் தராசுகளைப் பயன்படுத்துகிறது என்பதை விளக்கினர்.
ஹேய்லிஸ் பெருந்தோட்டம் தனது பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் எடுத்த தொடர் முயற்சிகள் பற்றிய கலந்துரையாடல்களும் இந்த விஜயத்தில் அடங்கும். இந்த முன்முயற்சிகள் விஜயத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மேலும் குழு கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நிறுவனத்தின் தனித்துவமான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது.
பெட்ரோ குழு உட்பட களனிவெளி பெருந்தோட்டக் குழு ஆகியவற்றிலுள்ள 8700 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 58000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விருது பெற்ற “ஒவ்வொரு தோட்டத் தொழிலாளிக்கும் ஒரு வீடு” திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் மேற்கொண்ட தனித்துவமான நலத்திட்டங்கள் பற்றிய கண்ணோட்டத்தையும் குழு வழங்கியது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, கடந்த வருட இறுதியில் பெட்ரோ தோட்டத்திற்கு விஜயம் செய்த பின்னர் தனது விஜயம் குறித்து கருத்து தெரிவித்தார். ”பிரபலமான இலங்கை தேயிலை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பேண்தகைமை மற்றும் மனித வளங்களில் புத்தாக்கங்களை அனுபவிக்கவும், கறுப்பு தேயிலை தோட்டங்களை சுற்றிப் பார்க்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம் தனது ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளமை தெளிவாகிறது. நிறுவனத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு நான் நல்வாழ்த்துக்கள் மற்றும் JASTECA இன் ஆதரவுடன் அவர்கள் செயல்படுத்திய தனித்துவமான செயல்முறைகள் மற்றும் ஒட்டுமொத்த நிறுவன அமைப்பைப் பாராட்டுகிறேன்.” என தெரிவித்தார்.
ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான 60 தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் மூன்று தனித்துவமான விவசாய காலநிலை வலயங்களில் சுமார் 26000 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டுள்ளன, இது மூன்று முன்னணி பிராந்திய தோட்ட நிறுவனங்களான களனிவெளி பெருந்தோட்ட நிறுவனம், தலவாக்கலை தேயிலை தோட்ட நிறுவனம் மற்றும் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானது.
தேயிலை மற்றும் இறப்பர் துறையில் முன்னோடியாக விளங்கும் ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம், மனித மூலதன நிர்வகிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, மக்கள் அதிகாரமளித்தல் மற்றும் நெறிமுறை வணிகத் தரம் ஆகியவற்றிற்காக உலகின் மிகவும் மரியாதைக்குரிய விருது பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நிலையான தோட்ட நிறுவனமாகும். இன்று, Hayley's பெருந்தோட்ட நிறுவனத்தில் 21,000 க்கும் அதிகமான ஊழியர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் 140,000 க்கும் அதிகமான மக்களை நிர்வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment