செயற்கை நுண்ணறிவு போலிப் படங்கள் பற்றி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்படும் பொய்யான படங்கள், உலகெங்கும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தக் கூடுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பொலிஸார் சிலர் பலவந்தமாகக் கைது செய்வது போன்ற பொய்யான படங்கள் அண்மை நாட்களாகப் பரவி வருவதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பது போன்ற பொய்யான படங்களும் பரவி வருகின்றன.

உண்மையான படங்களைப் போலவே தோற்றமளிக்கும் நிழற்படங்களும் வீடியோக்களும், உண்மை, பொய் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஆற்றலைக் குறைப்பதாக நிபுணர்கள் கூறினர்.

உலகம் பிளவுபட்டுள்ள இன்றைய சூழலில், இத்தகைய திருத்தப்பட்ட படங்கள், சமூகக் குழப்பத்தை ஏற்படுத்துமென அவர்கள் குறிப்பிட்டனர்.

கிடைக்கும் தகவல்கள் மீதான நம்பிக்கை குறைந்து உலக நடைமுறைகள் மீது அவநம்பிக்கை உருவாகுவதற்கு இது வழிவிடலாம் என்றனர் நிபுணர்கள்.


Add new comment

Or log in with...