800ஆவது கோலை பெற்றார் மெஸ்ஸி

பனாமா அணியை 2–0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்த போட்டியில் ஆர்ஜன்டீனா சார்பில் கோல் பெற்ற லியோனல் மெஸ்ஸி முதல் நிலைப் போட்டிகளில் தனது 800ஆவது கோலை பதிவு செய்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டும் முதல் வீரராக 35 வயது மெஸ்ஸி பதிவானார். மெஸ்ஸியின் இந்த கோல்களில் பார்சிலோனா அணிக்காக 17 பருவங்களில் பெற்ற 672 கோல்கள் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக பெற்ற 29 கோல்களும் அடங்கும்.

இதில் அவர் சர்வதேச போட்டிகளில் 99 கோல்களை பெற்றிருப்பதோடு ஆர்ஜன்டீனா வெற்றியீட்டிய கடந்த உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் பெறப்பட்ட இரு கோல்களும் உள்ளடங்கும்.

உலகக் கிண்ணத்திற்க பின்னர் ஆர்ஜன்டீனா ஆடிய முதல் சர்வதேச போட்டியாக புர்னோஸ் எயார்ஸில் கடந்த வியாழனன்று (23) நடந்த இந்தப் போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் புகுத்தினார். முன்னதாக தியாகோ அல்மடா 11 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்றார்.


Add new comment

Or log in with...