டி.எஸ் வொர்ரியர்ஸ் வெற்றி

இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் டி.எஸ் வொர்ரியர்ஸ் அணி வெற்றியீட்டியது.

இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி குளக்கரை மைதானத்தில் அண்டையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்று அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் டி.எஸ் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியே வொர்ரியர்ஸ் சம்பியனானது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) விசேட அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கௌரவ அதிதிகளாக இறக்காமம் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் கே.எல்.எம். நக்பர், அக்கரைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.எம். ஆஹிர் மற்றும் தொழிலதிபர் எஸ்.எம். சபீக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்முனை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...