கிளிநொச்சி - பளையில் கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது

- மார்ச் 28 வரை விளக்கமறியல் விதிப்பு

கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டு தொடர்பில், பளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கலால் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி, புதுக்காட்டு பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (22) இரவு எட்டு மணியளவில் கொழும்பு, பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைய புதுக்காட்டுப் பகுதியில் உள்ள அரச விடுதி ஒன்றில் இருந்தவாறு, குறித்த பளை பொலிஸ் நிலைய பொலிஸார் இருவரிடமும் 50 கிலோ கிராம் கஞ்சாவை பெறுவதற்கு பேரம் பேசி, அதன் தரத்தை சோதனை செய்வதற்காக அவர்களை தங்களது இடத்திற்கு அழைத்து, கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸாரின் உடமையிலிருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மார்ச் 28ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...