ஞானக்கா வீட்டில் 80 இலட்சம் கொள்ளை

அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்ற பெண்ணின் வீட்டில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஞானக்காவின் மகளின் கணவர் இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து அநுராதபுரம் தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருடப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளின் பெறுமதி சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இன்று 23ஆம் திகதி நடைபெறவுள்ள நண்பரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்த அவர், மனைவியின் அலுமாரியில் இருந்த தங்க நகைகளை சோதனையிட்டபோது பணத்துடன் தங்க நகைகளும் காணாமல் போனதை அவதானித்ததாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸார் விசாரணை


Add new comment

Or log in with...