கைதை எதிர்பார்க்கிறார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை (நாளை) தாம் கைது செய்யப்படலாம் என்று கூறியிருப்பதோடு தமது ஆதரவாளர்களை அதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் சட்ட அமுலாக்கல் பிரிவில் இருந்து எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். ஊடக செய்திகளை அடிப்படையாகக் கொண்டே ட்ரம்ப் இந்த அறிவித்தலை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரகசியங்களை வெளியே கூறாமல் இருக்க 2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆபாச நடிகை ஸ்டோமி டானியலுக்கு ட்ரம்ப் பணம் வழங்கியது தொடர்பிலான வழக்கிலேயே ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் குற்றம்சாட்டப்படும் பட்சத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீதான முதல் குற்றவியல் வழக்காக அது அமையும்.

ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். அவர் குடியரசுக் கட்சியின் நியமனத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் தம்மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டாலும் தேர்தல் பிரசாரம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...