தவக்கால சிந்தனை இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை

யோவான் 4: 43 – 54

தவக்காலத்தின் நான்காவது வாரத்தில் பயணிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியானது நற்செய்தியாளர் யோவானின் அடிப்படையில் இயேசுவின் எருசலேமுக்கான முதலாவது பயணத்தின் நிறைவு நிகழ்வாகும். இந்நிகழ்வுகளின் வாயிலாக இயேசு மீதான நம்பிக்கை படிப்படியாக மக்கள் மத்தியில் பரவுவதைக் காண்கிறோம்.

முதலில் அவருக்கு நெருக்கமான சீடர்கள், யூதர்கள் சார்பாக யூதத்தலைவர் நிக்கதேம், முழுமையாக யூதரல்லாத சமாரியப்பெண், இறுதியாக இன்றைய நற்செய்தியில் பிற இனத்தவராகிய அரசஅலுவலர் தம் மகன் சுகம் பெற்றபோது என்று பலரும் இயேசுவின் மீதுநம்பிக்கை கொள்கிறார்கள். இந்நிகழ்வுகளுக்கூடாக இயேசுவின் அழைப்பு யாதெனில் அருளடையாளங்களையும் அற்புதங்களையும் நாடாமல் அவர்மீது முழுமையான நம்பிக்கைகொள்ள அழைப்பு விடுக்கின்றார்.

யூதர்கள் எப்போதும் அடையாளங்களையே நம்பியிருந்தார்கள். அவ்வாறே இயேசுவின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கு அத்தகைய அடையாளங்களையே எதிர்பார்த்துக் காத்திருந்தது மட்டுமல்லாது, இயேசுவிடம் அடையாளங்களையே கேட்டார்கள்.

இன்றைய மனித வாழ்வும் அடையாளங்களை, அற்புதசெயல்களையே எதிர்பார்த்துக் காத்துநிற்பது ஒன்றும் வியப்புக் கிடையாது.

தவக்காலமானது அரச அலுவலர் போன்று இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் காலமாகும் என்பதனை மறவாது மனதிலிருத்தி செயற்படுவோம்.

அதற்காக இறையருளை வேண்டுவோம்.

-அருட்தந்தை நவாஜி...


Add new comment

Or log in with...