கண்டி- மஹியங்கனை 18 கொண்டை ஊசி வளைவு வீதியின் மூடப்பட்ட 2ஆவது வளைவுப்பு பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக குறித்த 2ஆவது வளைவுப் பகுதியில் பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த நிலையில், குறித்த பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக நேற்றையதினம் (19) பொலிஸார் அறிவித்திருந்தனர்.
குறித்த வளைவுப் பகுதியில் பாரிய பாளை ஒன்று சரிந்து விழும் நிலை காணப்பட்டதன் காரணமாக அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சீர் செய்யும் வரை அப்பகுதியில் பயணம் செய்வது தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது குறித்த வளைவுப் பகுதியில் இருந்த ஆபத்தான பாறைகள் மற்றும் மண் மேடுகள் அகற்றப்பட்டு மீண்டும் வீதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 04ஆம் திகதி குறித்த 18 கொண்டை ஊசி வளைவுப் பகுதியின் 14ஆவது வளைவுப் பகுதியில் மண்மேடு சரிந்ததன் விளைவாக அப்பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்ததோடு, பின்னர் சீர் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment