ஆப்கானிய பெண்களுக்காக ஆதரவளிக்க ஐ.நா அழைப்பு

ஆப்கான் பெண்கள் தங்கள் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காகப் பல முனைகளில் போராடி வருவதால் அவர்களுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பெண்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டு பெண்கள் மற்றும் சிறுமிகளின் பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகளை மிகவும் அடக்கும் நாடாக ஆப்கான் உள்ளது.

குறிப்பாக தலிபான்கள் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் 530க்கும் மேற்பட்ட நாட்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக பல்கலைக்கழகங்களும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளும் தடுக்கப்பட்டுள்ளன. அவர்களது உரிமைகளுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுக்கிறோம் என்றார்.


Add new comment

Or log in with...