கஸ்ஸாலி இல்லம் வெற்றி

இக்கிரிகொல்லாவ அந் நூர் தேசிய பாடசாலையின் இவ் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி அண்மையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் அதிபர் எச்.எம். சஹீட் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கஸ்ஸாலி, ஜாயா, இக்பால் ஆகிய மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டன. கஸ்ஸாலி இல்லம் 780 புள்ளிகளை பெற்று 01 ஆம் இடத்தையும், ஜாயா இல்லம் 774 புள்ளிகளை பெற்று 02 ஆம் இடத்தையும், இக்பால் இல்லம் 697 புள்ளிகளை பெற்று 03 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. இதில் 01 ஆம் இடத்தைப் பெற்ற கஸ்ஸாலி இல்லத்துக்கான வெற்றிக் கேடயத்தை அதிபரிடமிருந்து இல்லப் பொறுப்பாசிரியர் பர்சுக்கான் பெற்றுக்கொண்டார்.

திறப்பனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...