Sunday, March 19, 2023 - 2:08pm
களுத்துறை கட்டுக்குருந்தை யுனைடட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் வாழும் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது வேறு இடங்களில் குடியிருப்பவர்களை ஒன்றிணைக்கும் கிரிக்கெட் போட்டி ஒன்று நாளை (19) களுத்துறை வெட்டுமக்கட பாகிஸ்தான் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பத்து அணிகளாக பிரிந்து நடத்தப்படும் இந்தப் போட்டியில் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
பேருவளை விசேட நிருபர்
Add new comment