Sunday, March 19, 2023 - 4:20pm
ஜோர்தானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து, இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ. கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
கோபாலசாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதுடன் எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவை வழங்க வேண்டும் என இக்கலந்துரையாடலில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
Add new comment