நேபாளத்தில் திரண்ட கிரிக்கெட் ரசிகர்கள்

நேபாளத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல திரண்டனர். நேபாள நகரான கீர்த்திபூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நேபாள அணி ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்டது.

இதில் டக்வர்த் லுவிஸ் முறைப்படி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டி நேபாள அணி சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள 2023 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆட தகுதியை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியை காண அரங்கில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர். மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பஸ்ஸின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.

நேபாளம் 1996ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் இணை அங்கத்துவ நாடாக உள்ளது.


Add new comment

Or log in with...