இந்தியாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான டேவிட் வோர்னர், ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக செயல்பட்டு வந்தார். 2016இல் அவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சம்பியன் பட்டம் வென்றது.
இதனிடையே, கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் டேவிட் வோர்னரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்த நிலையில் அவரை டெல்லி கெபிடல்ஸ் அணி இந்திய நாணயப்படி 6.25 கோடிக்கு வாங்கியது.
இதேவேளை கார் விபத்தில் காயமுற்று ரிஷப் பாண்ட் தற்போது ஓய்வில் இருப்பதால், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணித் தலைமைப் பொறுப்பு வோர்னருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Add new comment