மீனகயா மட்டக்களப்பு ரயிலில் கைக்குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரிடமே குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 நாள் கைக்குழந்தையை மட்டக்களப்பு ரயிலில் விட்டுச்சென்றவர்கள் தாங்கள் சட்டப்படி திருமணம் செய்யவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன், குழந்தையை தங்களுடன் வைத்துப் பராமரிப்பதற்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.
கைக்குழந்தையை ரயிலில் கைவிட்டுச் சென்றவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இவர்கள் இருவரும் குழந்தையை பொறுப்பேற்கத் தயாரென நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்வதற்கு தயாராகி வருவதாகவும், சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமகே குழந்தையை பெற்றோரிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி பெற்றோர் குழந்தையுடன் மரபணுப் பரிசோதனைக்காக ஆஜராக வேண்டும் எனவும், நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Add new comment