இலங்கைக்கு உரம் வழங்கியமை உறுதிப்பாட்டின் அடையாளம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36,000 மெற்றிக்தொன் டிரிப்பிள் சூப்பர்போஸ்பேட் என்ற TSP உரம், 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு உதவியாக இருக்குமென, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

36,000 மெற்றிக்தொன் டிரிபிள் சூப்பர் போஸ்பேட் பொசுபேற்று உரம் தாங்கிய கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த உரம், யூ.எஸ் எய்ட் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், இது இலங்கைக்கு உதவியளிக்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் எனத் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...