உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவது மேலும் தாமதமடைய வாய்ப்பு

ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார

உள்ளூராட்சித் தேர்தல் தாமதமடையக்கூடுமென, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பணம் திறைசேரியிடமிருந்து இதுவரை கிடைக்காமையே அதற்குக் காரணமெனவும், அவர் தெரிவித்தார்.

திறைசேரியிடமிருந்து குறைந்தபட்சம் 300 மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுமாயின், அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க முடியுமெனவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். பணம் மற்றும் பாதுகாப்பை பெற்றுத்தருமாறு நிதி அமைச்சுக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் அரச அச்சகர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கைக்கு பொலிஸ் திணைக்களத்திடமிருந்து உரிய பதில் கிடைத்துள்ள போதிலும், பணத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதில்களும் இதுவரை கிடைக்கவில்லையென, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார். இந்நிலையில், முன்னுரிமை அடிப்படையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தாம் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

 

 


Add new comment

Or log in with...