மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு vivo உலர் உணவுப் பொருட்கள் நன்கொடை

முன்னணி நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக நாமமான vivo, அதன் சமீபத்திய #vivocares  சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு உலர் உணவுப் பொருட்களை அண்மையில் வழங்கியது.

vivo Sri Lanka இன் அதிகாரிகள் இந்த உணவுப் பொருட்களை அபேக்ஷா மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியிடம்  அன்பளிப்பு செய்ததுடன், மருத்துவமனை நிர்வாகம் vivo Sri Lanka நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

அபேக்ஷா வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி மேலும் கருத்து  தெரிவிக்கையில், இந்த உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதன் ஊடாக நோயாளிகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்கிய vivo Sri Lanka நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். உள்ளூர் சமூகத்தை ஆதரிப்பதில் vivoவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவு உணவுகள் குறிப்பாக தங்கள் வாழ்க்கையில் சவாலான காலத்தை எதிர்நோக்கும் 800 நோயாளிகளுக்கு காலை உணவை தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. vivo Sri Lanka ஒரு சமூகப் பொறுப்புள்ள அமைப்பாக இருப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், இலங்கை சமூகத்திற்காக அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட #vivocares நிகழ்ச்சித் திட்டம் அந்த தொடர்ச்சியான முயற்சியின் விளைவாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்த vivo Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.கெவின் ஜியாங். "மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கு இந்த இதயப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம், மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக நடவடிக்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். அனைவருக்கும் ஒளிமயமான, ஆரோக்கியமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்."

#vivocares முன்முயற்சியின் மூலம், மற்றவர்களிடம் கருணை, இரக்கம் மற்றும் நல்லெண்ணத்தைப் பரப்பும் பணியில் சேர vivo Sri Lanka எதிர்பார்க்கின்றது.. இது போன்ற கருணை செயல்கள் மக்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும் என்று vivo நிறுவனம் உறுதியாக நம்புகிறது.


Add new comment

Or log in with...