பெண்ணொருவர் கைது
பட்டபொல பிரதேசத்தில் ஏ.ரி.எம்.அட்டையை திருடி சுமார் 6,60,000 ரூபா கொள்ளையிட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டபொல பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி நேற்று முன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு,
சந்தேக நபரான இப்பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒரு பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாடு செய்தவர் வெளிநாட்டிலிருந்து வந்தவரெனவும் அவர், தனது தாய்க்கு அனுப்பிய பணத்தைப் பெற பயன்படுத்திய அட்டையையே, சந்தேகநபர் திருடியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட பணத்தில் எடுக்கப்பட்ட மூன்று தங்க நகைகள், ஒரு தங்க வளையல் மற்றும் 35,000 ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் நேற்று முன்தினம் பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Add new comment