இந்திய இராணுவ ஹெலிகொப்டர் அருணாச்சல மலைப்பகுதியில் விபத்து!

விமானிகள் இருவரின் கதி தெரியவில்லை!

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலி​ெகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலி​ெகாப்டரில் 2 விமானிகள் இருந்த நிலையில், அவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்திய இராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலி​ெகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான ரோந்து பணிகளிலும் ஹெலி​ெகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலி​ெகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.

நேற்றுக்காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த இந்த ஹெலி​ெகாப்டரில் இரண்டு விமானிகள் இருந்துள்ளனர். இதனால் விபத்துக்குள்ளான ஹெலி​ெகாப்டரில் இருந்த விமானிகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

அருணாச்சல பிரதேசம் மிகவும் மலைப்பாங்கான பகுதி என்பதால் வீதி மார்க்கமாக செல்ல அதிக நேரம் ஆகும் என்பதால் அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் ஹெலி​ெகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். எல்லைப் பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இராணுவ ஹெலி​ெகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் பகுதியில் தான் பொம்திலா என்ற இடம் உள்ளது. மலைப்பகுதிகளை கொண்ட இந்த இடத்தில்தான் விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்கான காரணம் மற்றும் விமானிகளின் நிலை குறித்து தொடர்ந்து முழு வீச்சில் இராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.


Add new comment

Or log in with...