ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டணி அவசியம்

பேராசிரியர் சரித்த ஹேரத் MP தெரிவிப்பு

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டணியை அமைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைத்து, மக்களை அடக்கி ஆளலாமென நினைத்த ஆட்சியாளர்கள், படுதோல்வி அடைந்ததே இந்நாட்டின் வரலாறு எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிரணிகளுக்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள், வழங்கியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலை நடத்தாதென்றே எண்ணத் தோன்றுகிறது. எனவே, எதிரணிகள் தம்மிடையிலான விமர்சனங்களை விடுத்து, ஜனநாயகத்தை பாதுகாக்க பரந்தப்பட்ட கூட்டணியாக ஒன்றுபட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...