புகையிரத கடவையில் கார் விபத்து; இருவர் பலி

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதமொன்றுடன் கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கல - ஹபராதுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த சியனே குமாரி எனும் கடுகதி புகையிரதத்துடனேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த புகையிரத கடவைக்கு குறுக்கே பாதுகாப்பற்ற வகையில், கவனயீனமாக கார் சாரதி காரை செலுத்திய நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, கார் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் புகையிரதத்தை நிறுத்தி குறித்த காரில் சிக்கியிருந்த இருவரையும் காப்பாற்ற மக்கள் கடுமையான பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த புகையிரதம் தாமதமாக பயணிக்குமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...