எயார் இந்தியாவுக்கு 500 விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்படிக்கை

- அமெரிக்கா, பிரித்தானியா பாராட்டி வரவேற்பு

எயார் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்கு 500 விமானங்களைக்  கொள்வனவு செய்வதற்காக போயிங் அன்ட் எயார் பஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர். 

'இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கை' என்று ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். இந்த உடன்படிக்கையின் ஊடாக  அமெரிக்காவில் புதிதாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.   

இதேவேளை, இவ் உடன்படிக்கையைப் பெரிதும் பாராட்டியுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், 'நாட்டின் பொருளாதாரம் செழிக்கவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகுக்கும்' என்றுள்ளார். 

'இவ்வொப்பந்தத்தின் ஊடாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் தொழில் வாய்ப்பு 5000 க்கும் மேல் அதிகரிப்பதோடு உலகளாவிய உற்பத்தி மற்றும் சேவைகள் துறைக்கும் நன்மை பயப்பதாக அமையும்' என்று ஏசியன் லைட் இன்டர்நஷனல் சுட்டிக்காட்டியுள்ளது. 

'இந்தியப் பொருளாதாரம், நிதித் துறையை விட பல துறைகளில் உலகையே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவற்றில் 500 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையும் ஒன்றாகும். இந்த உடன்படிக்கையின் ஊடாக இந்தியாவின் பொருளாதாரத் திறனை உலகம்  உணர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றில் பெருந்தொகையான விமானங்களை உலக சந்தையில் கொள்வனவு செய்ய மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கை இது.  உலகெங்கிலும் விமான சேவைகளை முன்னெடுக்கும் போது எயார் இந்திய நிறுவனத்திற்கு போட்டித்தன்மை மிக்க  நன்மைகளை இந்த உடன்படிக்கை அளிக்கும்' என்று ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...