தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் பொலிஸார் மீதும் நடவடிக்கை
மடகஸ்காரிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பிரபல பாதாள உலக நபர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு திணைக்களத்தின் பொறுப்பில் வைத்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதுதொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் காவிந்த பியசேகர ஆகியோருடனும் நேற்று மாலை பொலிஸ்மா அதிபர் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்படி பாதாள குழு நபர்களான இருவரையும் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் தவிர்ந்த வேறு எந்த விசாரணைக்குழுவிடமும் ஒப்படைக்காமலிருக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் எந்த விசாரணைக்குழுவும் அந்த விசாரணை சம்பந்தமாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திடம் காலம்தாழ்த்தாது நேரத்தைப் பெற்றுக்ெகாள்வது அவசியமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அத்தகைய விசாரணைகள் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே இடம்பெறவேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்ைகயெடுத்துள்ளனர்.அதற்குக் காரணம் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மோசமான பொலிஸ் அதிகாரிகள் சிலருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளமையாகும்.
மேற்படி இருவரிடமும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வெ ளிருவரும் தகவல்களை வைத்து அந்த அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் பொலிஸாரினால் கவனம் செலுத்தப்படும்.
தனிப்பட்ட ஜெட் விமானமொன்றின் மூலம் கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி மடகஸ்காருக்கு சென்றுள்ள மேற்படி இருவரும் பாதாள உலக குற்றவாளிகள் ஆறுபேர் மடகஸ்கார் பாதுகாப்புப் பிரிவினரால் கடந்த முதலாம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மடகஸ்காரிலிருந்து மீண்டும் வெ ளியேறுவதற்கு அந்நாட்டில் விமான நிலையத்திற்கு சென்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களுள் ஹரக் கட்டாவின் மனைவி என கூறப்படும் வெ ளிநாட்டு பெண்ணொருவரும் அவரது தகப்பன் என்று கூறப்படும் நபரும் உள்ளடங்குகின்றனர்.
அவர்கள் அந்த நாட்டில் பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டு அதுசம்பந்தமாக இலங்கைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிக்ைக விடுக்கப்பட்டிருந்ததுடன் அவர்களிருவரையும் சர்வதேச சட்டத்திற்கிணங்க, இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு மடகஸ்கார் பாதுகாப்புப் படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். அதற்கிணங்க கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையிலிருந்து மடகஸ்காருக்கு குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் விசேட செயலணி அதிகாரிகள் ஐந்து பேர் சென்றிருந்தனர். அவர்கள் மேற்படி இருவரையும் பொறுப்பேற்றுள்ளதுடன்
அவர்களுக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசிகளையும் மடகஸ்கார் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த கையடக்கத் தொலைபேசியூடாக ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் போதைப்பொருள் வலையமைப்பு மட்டுமன்றி இலங்கையில் அவர்களோடு தொடர்புகளைக் கொண்டிருந்த பொலிஸார் உள்ளிட்ட பலரது தகவல்கள் ஆதாரங்களுடன் காணப்படுவதாகவும் அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment