ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தபால் சேவை அத்தியாவசியமாக பிரகடனம்

- அதி விசேட வர்த்தமானி வெளியீடு

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்திற்கமைய ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கமைய, இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணிகள், பண்டங்களுக்கு பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் அண்மையில் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி மூலம்‌ ஜனாதிபதி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...