நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு ஒஸ்கார் விருது

- பாடலாசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி பெற்றனர்
- Everything Everywhere All at Once திரைப்படத்திற்கு 7 விருதுகள்

திரையுலகின் உயரிய விருதான ஒஸ்கரின் 95ஆவது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில், S.S. ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு.. நாட்டு..' எனும் பாடலுக்கு ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.

 

 

 

 

Best Original Song எனும் பிரிவில் வழங்கப்பட்ட இவ்விருதை பாடலாசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதனை சமூக வலைத்தளத்தில் இரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

 

இதேவேளை, சிறந்த ஆவண குறும்படத்திற்கான (Best Documentary Short) ஒஸ்கார் விருதை இந்தியாவின் The Elephant Whisperers வென்றுள்ளது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் இதற்கானவிருதை பெற்றனர்.

யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதியினரின் கதையை காட்சிப்படுத்திய குறித்த ஆவணப்படத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை , சிறந்த எடிட்டிங் ஆகிய 7 ஒஸ்கார் விருதுகளை Everything Everywhere All at Once திரைப்படம் பெற்றுள்ளது.

  • சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Everything Everywhere All at Once..!.
    (Everything Everywhere All at Once திரைப்படத்திற்கு டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனர் திரைக்கதை எழுதியுள்ளனர்)
  • இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஒஸ்கார் விருது Everything everywhere all at once படத்திற்கு கிடைத்துள்ளது.
  • சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை Everything everywhere all at once படத்தில் நடித்த மிஷேல் யோவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் படைத்தார்.
  • சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருதை வென்றது Everything Everywhere All at Once படம். Daniel Kwan, Daniel Scheinert விருதை பெற்றுக்கொண்டனர்.
  • சிறந்த படத்தொகுப்புக்கான ஒஸ்கார் விருதை வென்றது 'Everything Everywhere All At Once' திரைப்படம்.
  • சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருது பின்னாச்சியோவுக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த ஆவணப்படத்துக்கான ஒஸ்கார் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது
    (சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathesக்கு ஒஸ்கார் கிடைக்கவில்லை)
  • சிறந்த ஒப்பனைக்கான ஒஸ்கார் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஒஸ்கார் விருதை பெற்றனர்.
  • சிறந்த ஒளிப்பதிவுக்கான ஒஸ்கார் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.
  • An Irish Goodbye-க்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. டாம் பெர்கெலி மற்றும் ராஸ் ஒயிட் ஆகியோர் ஒஸ்கார் விருதை பெற்றுக் கொண்டனர்.
  • சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஒஸ்கார் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஒஸ்கார் விருது ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet On The Western Front படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருது All Quiet On The Western Front படத்திற்கு கிடைத்துள்ளது.
  • சிறந்த பின்னணி இசைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Alll Quiet On The Western Front படம். Alll Quiet On The Western Front படத்தின் இசையமைப்பாளர் வோர்கல் பெர்டில்மான் ஒஸ்கார் விருதை பெற்றார்.
  • ஜேர்மனியைச் சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் இதுவரை 4 ஒஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச படம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிமைப்பு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.
  • சிறந்த Visual Effects பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' படம்! ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஒஸ்கார் விருதினை பெற்றுக் கொண்டனர்.
  • சிறந்த ஒலிப்பதிவுக்கான (BEST SOUND) ஒஸ்கார் விருதை 'Top Gun: Maverick' திரைப்படம் வென்றது.
  • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Women Talking
  • சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை 'The whale' திரைப்படத்திற்காக ப்ரின்டன் ஃபரேஸர் பெற்றார்.

Add new comment

Or log in with...