கட்சி தாவிய 16 பேரை நீக்க தீவிர நடவடிக்கை!

தமிழரசுக் கட்சி அதிரடித் தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாக உள்ள போதும், ஏனைய கட்சிகளின் வேட்புமனுவில் போட்டியிடும் 16 பேரைக் கட்சியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்று அக்கட்சியின் செயலாளர் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிரந்தர உறுப்பினர்களாக இருந்துகொண்டு ஏனைய கட்சிகளில் போட்டியிடும் மேற்படி உறுப்பினர்களிடமே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை உறுப்பினர் இராமலிங்கம் இராகினி உட்பட 16 உறுப்பினர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளில் தற்போது அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி இவ்வாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு, 14 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...