'A Rebel legacy – The Poison Arrow' அஞ்சலி சல்காடோவின் புதிய நூல்

இலக்கிய ஆர்வலர்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியான உணர்வை அளிக்கும் வகையில், இளம்பெண்ணான அஞ்சலி சல்காடோ, 'A Rebel legacy – The Poison Arrow' என்ற தலைப்பில் ஒரு கற்பனை புனைகதை நாவலை வெளியிட்டார். 2020 ஆம் ஆண்டில், இந்த 15 வயது சிறுமி COVID-19 தொற்றுநோய்களின் போது வீட்டில் தங்கியிருந்தபோது தனது எண்ணம் யோசனைகளை வெளிப்படுத்த தொடங்கினார். ஒரு வருடத்திற்குள், இந்தப் புத்தகத்தை எழுதி முடித்ததோடு, பொது எழுத்துத் தேர்வுக்கும் தயாராகிவிட்டார்.

415 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை ஜெர்மி முல்லர் தொகுத்துள்ளதுடன் Jam Fruit Tree Publishers மூலம் ஜனவரி 2023 இல் வெளியிடப்பட்டது. 

இந்த நாவலின் மூலம் இரண்டு திறமையான இலங்கை இளம் பெண்களின் படைப்புத் திறமை வெளிப்படுகிறது. அதாவது நூலாசிரியராக அஞ்சலி சல்காடோவும் தற்போது கம்பளையில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றும் ஃபரா ஃபாஸ்லியும் இந்நூலின் அட்டையை உருவாக்கிய கலைஞரும் இந்நூலின் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாவலின் உத்தியோகபூர்வ வெளியீடு மார்ச் 04, 2023 அன்று சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, மார்ச் 8, 2023 அன்று பேர்ஃபுட் கார்டன் உணவகத்தில் நடைபெற்றது, இது இலங்கையில் பெண்களின் அற்புதமான, படைப்பாற்றல் மற்றும் இலக்கிய ஆற்றலுக்கு ஒரு சான்றாகும்.

இது ஒரு கிளர்ச்சியாளர்களின் குழுவையும் ஒடுக்கும் பிரிவிலிருந்து விடுபடுவதற்கான அவர்களின் போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளது.

தனது படைப்பாற்றலை மீண்டும் வலியுறுத்தி, அஞ்சலி தனது முதல் நாவலின் இரண்டாம் பாகத்தையும் முடித்துள்ளதுடன் இதனை தொடர் நாவல்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

அஞ்சலி மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுள்ளதுடன். கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஏ சித்திபெற்ற மாணவியும் ஆவார்.

Jam Fruit Tree Publishers, பெயாஃபுட் புத்தகக் கடைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழக விற்பனை நிலையங்களில் இந்நூல் கிடைக்கிறது.


Add new comment

Or log in with...