மக்கள் விடுதலை முன்னணி நாட்டை ஒரு நெருக்கடியிலிருந்து மற்றுமொரு நெருக்கடிக்குள் தள்ளவே விரும்புகிறது. அவர்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வழிமுறைகளை முன்வைக்க விரும்பவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ரூபாவின் மதிப்பு வலுவடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, டொலரின் வீழ்ச்சியும் ரூபாவின் மதிப்பு வலுவடைதலும் பொய்யானதென அண்மையில் தெரிவித்திருந்தார். திடீரென ரூபாவின் மதிப்பு வலுவடைந்துள்ளதாக அரசு கூறுவதை அவர் மறுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் நோக்குடனேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நேற்று இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும், சர்வதேச நாணய நிதியம் என்பது பொய். அரசாங்கத்துக்கு அதன் உதவிகள் கிடைக்காது. வேறு எந்த நாடும் உதவாதென கூறிய அனைத்தும் இன்று பொய்யாகியுள்ளன.
ரூபாவின் பெறுமதி போலியாக வலுவடையும் சாத்தியமோ முறைகளோ ஏதும் இல்லையே ? முதல் தடவையாக பல வருடங்களுக்குப் பிறகு சராசரி சந்தை மதிப்பை விட டொலர் குறைவாக இருப்பதை காண்கின்றோம். சராசரி சந்தை விலை டொலரின் அதிகாரபூர்வ மதிப்பை விட அதிகமாக உள்ளது.
Add new comment