மாதாந்த விலைத் திருத்தம்; Litro எரிவாயு சிலிண்டர் விலைகளில் மாற்றமில்லை

- இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருதி முடிவு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் அடிப்படையில், அதன் நன்மையை Litro பாவனையாளர்களுக்கு வழங்குவதைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

விலை சூத்திரம் மற்றும் தற்போதைய உலகளாவிய எரிவாயு விலையின் அடிப்படையில், 12.5 கி.கி. எரிவாயு சிலிண்டர் விலை குறிப்பிட்ட தொகையால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், இருப்பினும் தற்போதைய விலைகளை இம்மாதத்திலும் செயற்படுத்த முடிவு செய்யபட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், இம்மாத விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலான மாதாந்த விலை திருத்தத்தின் முடிவாக விலை அதிரிப்பை மேற்கொள்வதில்லை என, முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்:

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 4,743
  • 5kg சிலிண்டர்: ரூ. 1,904
  • 2.3kg சிலிண்டர்: ரூ. 883

கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,409 இலிருந்து ரூ. 4,743 ஆக ரூ. 334 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,770 இலிருந்து ரூ. 1,904 ஆக ரூ. 134 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 822 இலிருந்து ரூ. 883 ஆக ரூ. 61 இனால் அதிகரிப்பு

இதேவேளை, கடந்த ஜனவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு

அதற்கு முன்னர் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 4,360 இலிருந்து ரூ. 4,610 ஆக ரூ. 250 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,750 இலிருந்து ரூ. 1,850 ஆக ரூ. 100 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 815 இலிருந்து ரூ. 860 ஆக ரூ. 45 இனால் அதிகரிப்பு

Laugfs சிலிண்டர் விலைகள் கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 5,080 இலிருந்து ரூ. 5,280 ஆக ரூ. 200 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 2,032 இலிருந்து ரூ. 2,112 ஆக ரூ. 80 இனால் அதிகரிப்பு
  • 2.3kgரூ. 813 இலிருந்து ரூ. 845 ஆக ரூ. 32 இனால் அதிகரிப்பு

அதற்கு முன்பு லாஃப்ஸ் கேஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் கடந்த ஜனவரி 06 முதல் குறைக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 5,300 இலிருந்து ரூ. 5,080 ஆக ரூ. 220 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 2,120 இலிருந்து ரூ. 2,032 ஆக ரூ. 88 இனால் குறைப்பு

Litro கேஸ் எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்


Add new comment

Or log in with...