அமெரிக்க டொலருக்கு மாறும் லெபனானின் பேரங்காடிகள்

லெபனானில் அரசு அனுமதித்ததை அடுத்து பேரங்காடிகள் பலவீனம் அடைந்துள்ள உள்நாட்டு நாணயத்திற்கு பதில் பொருட்களை அமெரிக்க டொலரில் விலையிட ஆரம்பித்துள்ளன.

2019 தொடக்கம் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் லெபனான் மக்கள் தொகையில் 80 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டுவரும் உள்நாட்டு நாணயம் கடந்த புதன்கிழமையாகும்போது டொலருக்கு நிகராக 90,000 பெளண்ட்களாக இருந்தது. இதுவே ஜனவரி பிற்பகுதியில் 60,000 பெளண்ட்களாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில் டொலரில் விளையிடப்பட்டிருக்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் டொலர் கொடுத்து அல்லது அன்றைய தினத்திற்கான பரிமாற்ற வீதத்தின் அடிப்படையில் உள்நாட்டு நாணயத்தைக் கொடுத்து வாங்க முடியும்.


There is 1 Comment

Add new comment

Or log in with...