பிரதமர் தினேஷ் குணவர்தன தனது 74ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.
தேசிய வீரரான அமைச்சர் பிலிப் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குசுமா குணவர்தன தம்பதிகளின் இரண்டாவது புதல்வராக 1949 மார்ச் 02 ஆம் திகதி பிறந்த தினேஷ் சந்ர ரூபசிங்க குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் இளைஞர் அமைப்பு மூலமாக அரசியலில் பிரவேசித்து, 1973 ஆம் ஆண்டு முதல் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ள அவர், அமெரிக்காவின் ஒரிகன் மற்றும் நெதர்லாந்தின் நியன்ரோட் ஆகிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்றுள்ளார்.
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற மகரகம இடைத்தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினராக மக்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மக்கள் எதிர்ப்பு சட்டங்களை மீளப்பெறுவது தொடர்பிலும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அர்ப்பணிப்புள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டவராக அவர் திகழ்கின்றார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
Add new comment