வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை திருத்த வசதி

வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி பயனர்களின் உபயோகத்திற்காக புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி தங்களது நண்பர்களுக்கு அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி அனுப்பிய செய்தியை 15 நிமிடத்திற்குள்ளாக திருத்தம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...