கிளிநொச்சி விபத்தில் 60 வயதான 6 பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கருகில் நேற்று (25) பிற்பகல் ஏற்பட்ட பாரவூர்தி - துவிச் சக்கர வண்டி விபத்தில் 60 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை வெலிக்கந்தை பகுதியில் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக நின்ற நிலையில், அதற்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், பரந்தன் பகுதியில்  இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி எதிரே வந்த லொறியுடன் மோதிய நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் வட்டகச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா எனும் 60 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வேளையில் வீதியில் நெல் உலர விடப்பட்டிருந்ததாகவும், கடந்து சில வாரங்களுக்கு முன்னர் பரந்தன் பூநகரி வீதியிலும் நெல் உலரவிட்ட வீதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்


Add new comment

Or log in with...