தமிழகத்திலுள்ள ஸீரோ டிகிரி பதிப்பகம் கடந்த வருடம் சிறுகதை, குறுநாவல், நாவல் போட்டிகளை நடத்தியது. குறுநாவல் போட்டியில் இலங்கை சாவகச்சேரியைச் சேர்ந்த தாட்சாயணியின் குறுநாவலான 'தீநிழல்' பரிசு பெற்றது.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிரதேச செயலாளர் ஆவார். பரிசளிப்பு நிகழ்வு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இவருக்குரிய விருது, பரிசுத்தொகை இந்திய ரூபா இருபதாயிரம் மற்றும் குறுநாவல் தொகுப்பினை எம். ஜி. ஆர். ஜானகியம்மாள் கல்லூரி முனைவர் குமார் ராஜேந்திரன் பெற்று இலங்கைப் பதிப்பாசிரியர் எச். எச் விக்கிரமசிங்க அவர்களிடம் வழங்கியிருந்தார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த எச். எச் விக்கிரமசிங்க பரிசுத்தொகை இலங்கைப் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவினையும், விருதையும், பரிசு பெற்ற குறுநாவல் வெளிவந்த நூலையும், தாட்சாயணியிடம் வழங்கி வைத்தார்.
Add new comment